பார்ப்பவர்களை எல்லாம் பொறாமை கொள்ளவைக்கும் பகட்டான வாழ்க்கை, ஆனால் பளபளக்கும் கட்டிடத்து பாத்ரூம் dustbin களை கிளறினால் பார்வையில் வரத்தவறுவதில்லை கலாச்சாரத்தை சீரழிக்கும் காண்டம்கள்! IT கம்பெனிகளுக்குள் ஆண்களுக்கு முழு சுதந்திரம், வெட்கம் மானத்ததோடு ஒரு பெண் உள்ளே சென்றால் அப்படியே திரும்பிவர முடியாது, பாலியல் சார்ந்த அத்துமீறல்களை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை, மாறாக ஆதரிக்கிறது, ஒரு ஆணும் பெண்ணும் எந்தவித கேடுகெட்ட உறவில் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை காரணம் அதுபோன்ற உறவுகளில் இருக்கும் ஆணோ பெண்ணோ ஒரே கம்பெனியில் வேலை செய்யும் போது அவ்வளவு எளிதாக அந்த கம்பெனியை விட்டு வெளியே செல்லமாட்டார்கள், அவர்களுக்கு கொடுத்த டிரைனிங்கிற்கு ஒரு சில வருடங்கள் வேலை செய்தாலே கம்பெனிக்கு கோடிக்கணக்கில் லாபம் வந்துவிடும், அந்த லாபத்திற்காக ஆண் பெண்களை சகஜமாக பழகவிட்டு காதல் என்ற பெயரில் உடல்ரீதியான கருமத்தை வளரவிட்டு காலாச்சாரத்தை சீரழிக்கும் IT கம்பெனிகளை வேறென்ன சொல்லமுடியும், ஒழுக்கம் கட்டுப்பாடு என்று உள்ளே செல்லும் பெண்களை வேற்றுகிரக வாசிகளை பார்ப்பது போல் பார்ப்பார்கள், கேலி செய்வார்கள், தான் வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கை மீதே சந்தேகம் வருமளவிற்கு மனதை மாற்றுவார்கள், நடை உடை பாவனை பழக்கவழக்கம், மது, சிகரெட், செக்ஸ் என எல்லாவற்றையும் சர்வசாதாரணமாக மாற்றிவிடுவார்கள், ஏற்கனவே அதில் ஊறிப்போய் இருக்கும் ஆண்களும் பெண்களும் அதை முன்னிறுத்த நிர்வாகம் அதற்கு துணை நிற்கும், அடிக்கடி tour, trip, mind relaxation என வெளியூர்களுக்கு அழைத்து சென்று மது, போதை என சகஜமாக பழகவிட்டு தேவையற்ற உறவுகளுக்கு இவர்களே வழிவகுப்பார்கள், ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவு வகைகளை குறிப்பெடுக்கும் போதே எந்த
Brand மது என்பதை கேட்பார்கள், மது அருந்துவீர்களா என்பது கேள்வியில்லை, எந்த Brand மது என்பது தான் கேள்வியே, மது அருந்துவதை மறைமுகமாக ஊக்குவிப்பதும், அதன்மூலம் நடக்கின்ற தவறுகளுக்கு வழிவகுக்கும் இந்த கம்பெனிகளுக்கு மாடர்ன் மாமாக்கள் என்ற பெயரை விட வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்கும்!? இதை அறியாத எத்தனையோ பெண்கள் விட்டில் பூச்சிகளாய் இந்த IT வெளிச்சத்திற்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், வேலையின் நோக்கம் பணம் மட்டுமன்றி கௌரவமும் கண்ணியமும் கூட அதில் அடங்கி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்!