2012-01-01 ~ Rajking

.


Thursday, January 5, 2012

Vasanth TV

Dan tamil oli Tv

 ;

Wednesday, January 4, 2012

ALL IN ONE TV


Monday, January 2, 2012

எதைகொண்டு நான்.....


கண்கள் இரண்டு, கால்கள் இரண்டு 
கைகள் இரண்டு என படைத்த அந்த 
இறைவன்! - உனக்கு 
மனதையும் இரண்டாக 
படைத்துவிட்டான்! 
என் மீது காதல் 
என்று அடித்துசொல்லும் 
உன் விழிமனது!-அது 
இல்லையென்று மறுத்துசொல்லும் 
உன் வாய்மனது! 

இதில் எதைகொண்டு நான் 
வாழ்வது...............? 

இளமை

பூ போன்றது 
உன் இளமை, 
உதிர்வதற்குள் 
உலகில் மணம்பரப்பிடு... 

பசுமை போன்றது 
உன் இளமை, 
பருவம் பாருவதற்குள் 
வாழ்வை வாழ்ந்திடு... 

வானவில் போன்றது 
உன் இளமை, 
தேய்ந்து மறைவதற்குள் 
ரசித்து ருசித்திடு... 

பெருங்கடல் போன்றது 
உன் இளமை, 
அதில் மூழ்குவதற்குள் 
நீ முத்தெடுத்திடு...


என்னைப்போல் இன்னும் எத்தனைபேர் 555


காதலே ..... 
காதல் மலர்வது என்னவோ 
பூச்செடியில்தான் என்பது 
எல்லோருக்கும் தெரியும்... 

அது உதிர்வது என்னவோ 

கல்லறையில் என்பது 

எத்தனை பேருக்கு தெரியுமோ... 

என்னைப்போல் இன்னும் 

எத்தனையோ பேர் இம்மண்ணில்.....


உனக்கு மன்னிப்பா?

உன்னை மன்னித்து 
என்னை நான் 
அவமானப்படுத்திக்கொள்ள 
விரும்பவில்லை

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி


பூவாக பொறந்திருந்தா 
பூமியில எடமிருக்கும் 
பொண்ணாக பொறந்ததால 
போய் வாடி கன்னுக்குட்டி. 

திண்ணையில எடுத்துவச்ச 
கள்ளிபால குடிச்சுபுட்டு 
சின்ன மூச்சே நின்னுபோடி. 
சீக்கிரமா செத்துபோடி. 

மூணுமணிநேரமுன்னே 
பூமிக்கு வந்தவளே! 
மூணுகிலோ எடையிருக்க 
மொடமின்றி பொறந்திருக்க. 

மொகராசி பரவால்ல 
மூக்குநுனியூம் பரவால்ல 
மகராசி நீ பொறந்த 
நேரந்தான் நல்லால்ல 

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை 
போட்டு பொத்தி வப்போம். 
பொட்டமாடு பொறந்துச்சுன்னா 
பொங்க வச்சு பூச வப்போம். 

வந்ததுமே போறதுக்கு 
என்னவரம் வாங்கி வந்த? 
பொல்லாத பூமிக்கு 
பொம்பளயா ஏண்டி வந்த? 

வேறேது கிரத்தில் 
பொறந்திருக்க கூடாதா? 
நம்ம வீட்டு நாயாக - நீ 
இருந்திருக்க கூடாதா? 

எறும்பாக புழுவாக 
எதுவாக பொறந்தாலும் 
நல்லாத்தான் பொளச்சிருப்ப 
நாயாக இருந்தாலும். 

அடுத்தமுறை பூமி வந்தா 
ஆம்பளயா வந்து சேரு. 
அப்படியூம் முடியலன்னா 
ஆடுமாடா வரப்பாரு. 


காத்திருக்கிறேன் தோழியே ...........


தோழியே விடை பெற்று 
நீ சென்று விட்டாய் ....... 

ஆனால் விடை தெரியாமல் 
விம்மிக்கொண்டு நான் ...... 

கலங்கிய கண்களுடன் 
உன் வழி பார்த்து நான் ........... 

திரும்பிப்பார்ப்பாய் 
என்ற திடமான நம்பிக்கையும் 
திரவமாகிப்போனது 
கண்ணீராய் ............ 


இருந்தாலும் 
வாழ்ந்துகொண்டு 
இருக்கிறேன் ........ 

என்றாவது 
நீ புரிந்துகொள்வாய் 
என்னையும் ......... 
நம் நட்பையும் ................ 

என்ற நட்பான 
நம்பிக்கையுடன் ..........


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons